ஊரடங்கு காரணமாக 'வீடியோ கால்' மூலம் திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பலர் தங்களது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தள்ளிவைத்து வருகின்றனர். சிலர் தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா அதிகம் பதித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு திருமணம் வீடியோ கால் மூலம் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணத்திற்கு மாப்பிள்ளை மட்டும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு மத குருமார்கள் வந்து இருவரின் சம்மதம் கேட்டுள்ளனர். மணமகள் தனது சம்மதத்தை வீடியோ கால் மூலம் தெரிவிக்க பின்னர் இருவருக்கும் திருமணத்தை பெரியோர்கள் நடத்திவைத்தனர்.