வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பினராயி விஜயன் – ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் பழனிசாமி.!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வந்த வைரஸ், தற்போது நாடு முழுவதும் பரவி இருக்கிறது. இதன் விளைவு காரணமாக அனைத்து மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக கொரோனா வைரசால் அதிக பாதித்த மாநிலம் மஹாராஷ்டிர 423, தமிழ்நாடு 411, டெல்லி 386, கேரளா 295 என அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலில் கேரளாவில் அதிகப்படியாக கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது 500-ஐ நெருங்கி வருகிறது. இதனிடையே அண்டை மாநிலமான கேரளா, தமிழகத்தில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து சாலைகளும் தடுக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது என்று வதந்தி பரவி வருகிறது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது இதுபோன்ற ஒரு விஷத்தை நாங்கள் நினைத்ததில்லை என்றும் அவர்கள் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமில்லை அவர்களை சகோதர்களாகவே பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தமிழக முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசிய வீடியோ- வுடன் பதிவிட்டுள்ளார். அதில் கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர, சகோதரிகளின் உற்று துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும் என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi pic.twitter.com/W0eMAVbMPm
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 4, 2020