3-ஆம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு உள்ளிட்டவை வழங்க தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள்,அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கு நிவாரண உதவித் தொகையும் , அதிகரிக்கும் வழங்கி வருகிறது.
குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தலா 12 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . இதன் மூலம் 4022 மூன்றாம் பாலினத்தவர் பயன் பெற உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.