கொரோனா நோயாளிகளுக்காக தன் திருமணத்தையே தள்ளிவைத்த இளம் பெண் மருத்துவர்.!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கேரளாவில் இதுவரை 295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு மருத்துவ சிகிச்சைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வரும் இளம் பெண் மருத்துவர் தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ளார்.
கண்ணூர் பகுதிக்கு அருகே பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ஷிபாவிற்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் மார்ச் 29ஆம் தேதி நாடகவிருந்தது.
ஆனால், அப்போது திருமணம் நடக்கவில்லை. மருத்துவர் ஷிபா, தற்போது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருவதால், இந்த சமயம் திருமணம் வேண்டாம் என தனது திருமணத்தை மருத்துவர் ஷிபா தள்ளிவைத்துவிட்டாராம். இதனை அவரது குடும்பத்தினரும் வரவேற்றுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்காக தனது திருமணத்தையே தள்ளிவைத்த பெண் மருத்துவரின் முடிவு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.