மலிவான விளம்பர அரசியலை தவிர்க்க வேண்டும் -பிரதமர் மோடி குறித்து அழகிரி அறிக்கை
மலிவான விளம்பர அரசியலை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறித்து அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதற்கு பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசாமல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதனால் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இவர்களை அந்த மாநிலத்திலேயே இருக்கவைத்து செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியம் இறப்புக்கு யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா? இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சி தான் காரணம் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். இந்த உயிரிழப்பு ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குறிப்பிட விரும்புகிறேன். எனவே, பிரதமர் மோடி அவர்களே, போதும் இழப்பு. இனியாவது கொரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன்வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசாமல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதனால் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இவர்களை அந்த மாநிலத்திலேயே இருக்கவைத்து pic.twitter.com/zgLbukX5Rj
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 4, 2020