கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பின்னர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அஇஅதிமுக சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. #CoronavirusOutbreakindia pic.twitter.com/wSNw7v9gWD
— AIADMK (@AIADMKOfficial) April 4, 2020