11 லட்சத்தை தாண்டிய கொடூரம்..அதிவேக மின்னல் பரவல்..சமாளிக்க முடியாமல் திணரும் நாடுகள்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் கோவிட்-19 என்று பெயரிடப்பட்ட இவ்வைரஸின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மின்னல் வேகத்தில் பரவியது.மேலும் தனது தொற்றால் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.இந்நிலையில் இந்த வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பது மற்றுமொரு வருத்தமான தகவல்.இதனால் வைரஸ் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எல்லாம் ஒவ்வொரு நாடும் அதிதீவிர கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தும், கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் வருகின்றன. அதே போல் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இவ்வாறு நாடுகள் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவல் குறைந்த பாடில்லை அது இன்னும் அதிவேகமாக பரவி வருகிறது.அதன் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமலும், செய்வது அறியாமலும் உலக நாடுகள் கடும் அச்சத்தில் திகைத்து நிற்கின்றன. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 11 லட்சத்தை தாண்டி மின்னல் வேகத்தில் பரவி தனது அசுர வளர்ச்சியை நாடுகளுக்கு காண்பித்து வருகிறது. அதே போல பலியானவர்களின் எண்ணிக்கையும் 59 ஆயிரத்தை கடந்து சவால் விடுக்கிறது .
மேலும் உலக அளவில் இதன் பாதிப்பில் அதிகபட்சமாக அமெரிக்காவில் தான் 277,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.