BREAKING : கொரோனா பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2547 ஆக இருந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்துள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 309 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்திருந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்கனவே மதுரையில் ஒருவர்உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவதாக விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 51 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர் என தகவல் வெளியாகியுள்ளது.