இந்திய ரயில்வே 2.8 எல் முகமூடிகளை, 25,000 லிட்டர் சானிடைசர் உற்பத்தி.!
உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கடந்த 24ம் தேதி பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். இந்த நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், சேவை பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது. அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு, ரயில் பெட்டிகளை மருத்துவ வார்டுகளாக மாற்றும் பணி ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாற்றப்படும் போது அந்த வார்டுகளில் செல்லும் மருத்து பணியாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்திய ரயில்வே இதுவரை 2,87,704 முகக்கவசங்கள் உற்பத்தி செய்து உள்ளதாக ரயில்வேதுறை தகவல் தெரிவித்துள்ளது. கைகளை சுத்தம் செய்யும் சானிட்டைசர் திரவம் 24,806 லிட்டர் தயாரித்து வழங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா நிவாரண நிதிக்கு இந்தியன் ரயில்வே ரூ.151 கோடி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.