தூத்துக்குடி துறைமுக ஊழியர் கஞ்சத்தனத்தால் 100 சவரன் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய மனைவி!
144 ஊரடங்கு தடை உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில், நேற்று ஏப்ரல் மூன்றாம் தேதி தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரிய செல்வம் நகரில் உள்ள தூத்துக்குடி துறைமுக ஊழியர் ஆகிய வின்சன்ட் என்பவரின் வீட்டில் அன்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அவரது மனைவி ஜான்சி படுத்திருந்த அறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பக்கத்தில் உள்ள அறையில் இருந்த பீரோவில் 100 சவரன் நகையும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக நேற்று காலை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதன் பெயரில் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கிடைக்காமல் தள்ளாடி கொண்டிருந்தனர். நாயும் யாரையும் கவ்வவும் இல்லை கண்டுபிடிக்கவும் இல்லை. சிறிது தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பிவிட்டது என கூறப்பட்டது. அதன் பின்பு கைரேகைகளை பதிவு செய்த போலீசார் அவர் துறைமுக ஊழியர் வின்சன் சவேரியார் பிச்சை அவர்களின் மனைவி ஜான்சிராணி இடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது துருவித்துருவி விசாரணை செய்ததில் தனது கணவரின் கஞ்சத்தனத்தால் 100 பவுன் தங்க நகையை தானே தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிடத்தில் புதைத்து வைத்துவிட்டு வீட்டினரை நம்ப வைப்பதற்காக 100 பவுன் நகையும் கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியது ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டால் இந்த கொள்ளை நாடகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்போது மக்களிடையே வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கணவரின் கஞ்சத்தனத்தால் நகையை பதுக்கி வைத்து கொள்ளை போனதாக நாடகமாடிய சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.