இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2902 ஆக உயர்வு.!
இந்தியாவில் கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிர 423, தமிழ்நாடு 411, டெல்லி 386, கேரளா 295 என அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.