சற்று பயமாக தான் உள்ளது! மேயாத மான் பட இயக்குனர் ட்வீட்!
இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மேயாத மான் பட இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் , ‘ வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு கண்டனங்கள் தெரிவித்திருக்கலாம். இப்பொது அடுப்பாய் பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக இருக்கிறது.’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.