3 மாதங்களுக்கு இஎம்ஐ வசூல் இல்லை ! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு யாருக்கு லாபம் ?
இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் இஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மூன்று தவணைகளை ஒத்திவைப்பவர்களுக்கு கூடுதலாக 5 தவணைகள் கூட செலுத்த நேரிடும் என்றும், கூடுதல் வட்டி செலுத்துவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், வருமானம் இன்றி இருப்போர் நெருக்கடியில் இருந்துமீண்டு வரலாம் ,ஆனால் அவர்களால் வங்கிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதுதே உண்மை என்று தெரிவித்துள்ளனர். எனவே, தவணையை செலுத்தும் அளவுக்கு வருவாய் இருப்பவர்கள் தவணை ஒத்திவைப்பு சலுகையை ஏற்காமல், மாதத் தவணையை தொடர்ந்து செலுத்துவதே லாபம் என்று தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.