கொரோனா விவகாரம்…. ஒரு மாத ஊரடங்கை அறிவித்தார் சிங்கப்பூர் பிரதமர்…
உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்து தனது கொடிய பிடியில் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தனது தாக்கத்தை உலக நாடு முழுவதம் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த வழிமுறை நல்ல பலனை கொடுத்துள்ளதால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. இதனை பின்பற்றி உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், பொருளாதார துறைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று என்று சிங்கப்பூர் பிரதமர் லீ தற்போது தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் இந்த முயற்சி கொடிய அரக்கனான கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் என நம்பப்டுகிறது.