கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்! முழு உடல் பாதுகாப்பு ஆடை தயாரிக்க முடிவு!
இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் உயிரை காப்பாதற்காக மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு ஆடை தயாரிக்க டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நாளொன்றுக்கு ஏழாயிரம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிற நிலையில், இதனை இரட்டிப்பாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.