இரண்டாம் முறையாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த அதிபர் டிரம்ப்…
சீனாவில் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஐக்கிய அமெரிக்காவிலும் பரவ தொடங்கியது. அதன் பரவல் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி அமெரிக்க மக்களை கொத்துக்கொத்தாக கொல்லத் தொடங்கியது. அப்போது அந்நாட்டு மக்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்கர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும், எனினும் அனைத்து அமெரிக்கர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்.பின்னர் டிரம்ப்பிற்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், இரண்டாவது முறையாக நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். 15 நிமிடத்தில் முடிவு வெளியானது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிந்து கொண்டேன் என்றார்.