கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளித்தவர்களின் விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் இந்தியாவிலும் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி அளிக்க முதல்வர் தரப்பிலும், இந்திய அளவில் பிரதமர் தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்பின் பல்வேறு தரப்பிலிருந்து தமிழக அரசிற்க்கும் இந்திய அரசிற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசிற்க்கு இதுவரை ரூ.36.34 கோடி ரூபாய் நிதியுதவி வந்துள்ளதாக தமிழக அரசு தற்போது தகவல் தெரிவித்துள்ளது. நேற்று வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.36.34 கோடி வந்துள்ளது என்றும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க தமிழக அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும், கொரோனா நோய் தடுப்பு பணிக்கு மத்திய அரசு மேலும் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று சமீபத்தில் பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார். மேலும், தற்போது வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.36.34 கோடி கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதின் முக்கிய விவரங்கள்;
- Tvs மோட்டார் நிறுவனம் – ரூ.5 கோடி
- சக்தி மசாலா நிறுவனம் – ரூ.5 கோடி
- ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் – ரூ.2 கோடி
- சிம்சன்ஸ் நிறுவனம் – ரூ.2 கோடி
- சண்முகா நிறுவனம் – ரூ.1.25 கோடி
- எஸ்.ஆர்.மிஸ்ட் நிறுவனம் – ரூ.1.15 கோடி
- தமிழக ஆளுநர் அலுவலகம் – ரூ.1 கோடி தமிழக ஆளுநர் அலுவலகம் – ரூ.1 கோடி
- திமுக அறக்கட்டளை – ரூ.1 கோடி
- நேஷனல் – ரூ.1 கோடி
- தமிழ்நாடு தொழில் முன்னேற்றக்கழகம் – ரூ.1 கோடி
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் – ரூ.1 கோடி
- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் – ரூ.50 லட்சம்
- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் – ரூ.1 கோடி
- ராசி சீட்ஸ் நிறுவனம் – ரூ.50 லட்சம்
- GVG பேப்பர் மில்ஸ் – ரூ.40 லட்சம்
- GRT தங்கமாளிகை – ரூ.50 லட்சம்
- பஞ்சாப் அசோசியேசன் – ரூ. 50 லட்சம்