வெட்கமா இல்ல…பெண்ணின் முகத்தில் எச்சில் உமிழ்ந்த விவகாரம்..சீனர்களா!?? நீங்கள்-கிழித்தெடுக்கும் கேப்டன்
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களை சீனர்கள் என கேலி செய்வதும் தொடர்ந்து அவர்களை அவமானப்படுத்தியும் வரும் செயல்களை கண்டித்து இது மிகவும் இழிவான, வெட்கப்பட வேண்டிய செயல் என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில் கடந்த வாரத்தில் மைசூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை காய்கறிக் கடைக்குள் அனுமதிக்கமால் தடுத்து உள்ளனர்.மேலும் அவர்களிடம் ஆதார் அட்டை இல்லையென்பதால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். உங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கிறது, உங்களை வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இழிவாக நடத்தினால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்? இது இழிவானது. நீங்கள் வெட்கப்படவேண்டும். இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்வதுதான் உங்களுக்கு நல்லது என்று தெரிவித்த அவர் சீனர்களைப் போல இருப்பதாக வடகிழக்கு மாநிலத்தவர்கள் தொடர்ச்சியாக அவமானப்படுத்துகிறார்கள் மேலும் சீனாவில் இருந்து வைரஸ் பரவிதன் விளைவாக வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த மக்களை அவமானப்படுத்துவது கண்டத்திற்குரியது. கடந்த வாரம் வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் முகத்தில் எச்சில் உமிழப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படியான செயல் இன துவேஷம் இது கடுமையக கண்டித்தக்கது என்று தெரிவித்தார்.