இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலடி?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா அமெரிக்காவுக்கு எத்தகைய இறக்குமதி வரியை விதிக்கிறதோ அதற்கு இணையான வரியை அமெரிக்காவும் விதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரி குறித்து ஏற்கனவே குறை கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட பின் தொழில் துறையினர் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைந்தபட்ச வரியே விதிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த நாடுகளில் அமெரிக்கப் பொருட்களுக்கு 25 முதல் 75 சதவீத வரி விதிக்கப்படுவதாகக் கூறினார்.
இனி அமெரிக்கப் பொருட்களுக்கு எந்த அளவில் வரி விதிக்கப்படுகிறதோ அதற்கு இணையான வரி அந்தந்த நாட்டுப் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.