தப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்..!தகவல் அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை
தப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதாகவும்,தகவல் அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் தப்லீக்-ஏ-ஜமாத் நடத்திய இஸ்திமாவில் கலந்துகொண்டு தகவல் அளிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் கூறுகையில் மனிதநேயத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஜமாத்தினர் செய்த தவறுக்கு மக்கள் பாதிக்கப்படக் கூடாது. இதில் வெளிநாட்டினராக யாராக இருந்தால் அவர்களது பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் இஸ்திமாவிற்கு பின் ஜமாத் கூட்டங்களுக்காக வந்தவர்கள் உ.பி.யில் உள்ள மசூதிகளில் சிக்கி உள்ளனர். மேற்குப் பகுதியில் உள்ள ஷாம்லியின் மசூதிகளில் 28 பேர் ஜமாத்திற்காக தங்கியிருப்பது தெரிய வந்தது. இந்த தகவலை மறைத்ததாக ஒரு மவுலானாவிடம் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்குப் பகுதியில் உள்ள கோண்டாவின் மசூதிகளில் ஜமாத் கூட்டத்திற்கு வந்த வெளியாட்கள் சுமார் 50 பேர் சிக்கி உள்ளனர். இவர்களை தற்போது தனிமைப்படுத்தி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.இந்நிலையில் தப்லீக்-ஏ-ஜமாத் செய்தது தலிபான் வகை குற்றம் என மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வீ கூறியுள்ளார்.