10 லட்சத்தை நெருங்கும் கொரோனா..!ஒரே நாளில் 1,049 உயிரை காவு வாங்கிய கொடூரம்
உலகம் முழுவதும் தனது மின்னல் வேகத் தொற்றுக் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்து உயிர்களை காவு வாங்கி வரும் கொடூர கொரோனாவிற்கு உலக நாடுகளே சீர் குலைந்து கிடக்கிறது.இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அவ்வாறு தற்போது வரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.வல்லரசு என்று தன்னையே வாழ்த்து கொண்ட அமெரிக்கா கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறி வருவதை உலக நாடுகளே உற்று நோக்கி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிள்ளது.மேலும் அங்கு ஒரே நாளில் 1,049 பேர் பலியாகிய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.