ரஜினிகாந்த் இமயமலைக்குப் புறப்பட்டார்…தங்கியிருக்க திட்டமா?
இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்ட அவர், சிம்லா சென்று அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்.
இமயமலையில் அவர் 10 முதல் 15 நாட்கள் வரை தங்க திட்டமிட்டுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அரசியல் இயக்கம் தொடங்க உள்ள நிலையில் செல்வதால் புதிதாக வேண்டுதல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.