BREAKING:சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு .!
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.