நண்பர் என்று கூட பார்க்காமல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்கு தண்டனை! மன்னிப்பு கேட்ட காவல்துறை.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வரக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. அப்படி மீறி வருபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதையும் மீறி சாலையில் வாகனங்களில் சுற்றுபவர்களை காவல்துறை அடித்தும், சில போலீஸ் வித்தியாசமான முறையில் தண்டனைகளை வழங்கியும் வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் புளியந்தோப்பை சேர்ந்த மூர்த்தி என்பவர் வெளியில் சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது காவலர் சத்ய உட்பட 3 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில் ஊரடங்கை மீறி சென்றவர்களுக்கு தோப்பு கரணம் போடா சொல்லு நூதன முறையில் தண்டனை வழங்கினர். இந்த நிலையில் அங்கு வந்த மூர்த்தியை போலீஸ் தடுத்தி நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் சத்யா, கையில் வைத்திருந்த லத்தியால் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து காவலர் சத்யா மற்றும் மூர்த்தி இருவரும் சேர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் காவலர் சத்யா மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். பின்னர் மூர்த்தி காவலர்கள் தன்னை விசாரிக்கும்போது நான் கொஞ்சம் வார்த்தையை விட்டுவிட்டேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காவலர் சத்யாவும், நானும் 14 வருட நண்பர்கள் என்றும் நாங்கள் இருவரும் ஒரே மைதானத்தில் பயிற்சி பெற்றோம் என கூறினார். மேலும் ஒரு நண்பர் என்று கூட பார்க்காமல் ஊரடங்கை உத்தரவை மீறியதற்கு தண்டனை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார். அதில் எந்த தவறும் இல்லை என்றும் இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறினார். கொரோனா குறித்த பாதிப்பு பொதுமக்களுக்கு புரிய வேண்டும் என்று காவல்துறை, மருத்துவர்களை இரவும் பகலுமாக பணிகளை செய்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.