கொரோனாவை கட்டுப்படுத்த மருந்துப்பொருள்களை தந்து உதவ ஜி-20 நாடுகள் முடிவு…

Default Image

கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு  முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரஸ் பாதிப்பை தடுக்க, பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படும் முயற்சியை, நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இதற்காக முதலில், ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் தலைவர்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவருடைய ஆலோசனையின்படி, ஜி – 20  என்ற பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது.இந்த  ஜி – 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் உள்பட, 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜி – 20 நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர்கள் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து  விவாதிக்கப்பட்டது. பின் இது தொடர்பாக, கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜி – 20 நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுநாடுகளுக்கு  மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவ ஜி – 20 நாடுகள் தற்போது முன்வந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்