உண்மையில் உத்தமர்கள் நீங்கள்..மலர்தூவி..மாலை அணிவித்து..பாராட்டிய பொதுமக்கள்

Default Image

பாட்டியாலா: கொரோனா வைரஸை எதிர்த்து இரவு பகல் பாராது உழைத்து வரும் தூய்மை பணியாளர் ஒருவருக்கு, ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை அணிவிந்தும்,அவர் மீது மலர் தூவியும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி நெகிழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது உள்ளது.

கொரோனா எனும் கொலைக்கார வைரஸ் உலகளவில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் பாதிப்பு இந்தியாவிலும் காணப்படுகிறது.அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கவும் தொற்றை அகற்றும் பணியில் தொடர்ந்து டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நாம் உண்மையில் கடமைப்பட்டுள்ளோம்.உயிர் போகும் என்று தெரிந்தும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தூய்மைப் பணியாளர்களை கண்டு  அலட்சியமாக  நினைத்தவர்களும் தற்போது அவர்களின் போற்றத்தக்க பணியை கண்டு தலை குணிகின்றனர். அவர்கள் இல்லை என்றால் நாடு நாறிப்போகும் நிலை தான்.இத்தகைய தெய்வங்களை போற்றி வணங்க வேண்டும் அவ்வாறு தான் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள நாபா பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் செய்த செயல் நாட்டில் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அந்தப் பகுதியில், துப்புறவு பணி செய்யும் தூய்மை பணியாளருக்கு மாலை அணிவித்து, வீட்டின் மாடியிலிருந்து அவர்கள் மீது மலர் தூவியும், கைகளை தட்டியும் அவர்களின் நிறை பணிக்கு மனமதார பாராட்டு தெரிவித்தனர். அதில் ஒருவர் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அவருக்கு அணிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நாம் உண்மையில் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.,நாடே ஊரடங்கால் ஓய்வு எடுத்த போதிலிலும் ஓய்வின்றி உழைக்கும் கடவுள்களை மிதிக்காமல் மதித்து ..வணங்குவோம்!!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்