மருந்து கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை – மத்திய அரசு விளக்கம்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கிடைக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு தரப்பில், மருந்துகள் கிடைப்பதில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை எனவும், தேவையான ரசாயனம் மற்றும் உரத்துறை மருந்துகள் விநியோகம் செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விளக்கம் அளிக்கப்பட்டது.