IFFCO நிறுவனம் சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி

IFFCO நிறுவனம் சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ்  இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.

எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியா விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம்  (IFFCO) சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

#CoronaInTamilnadu | #Covid19India | #coronavirusindia | #CoronavirusLockdown | #21daylockdown | #CoronaUpdate #IFFCO #PMCARES