வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய ஸ்டாலின்

Default Image

வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். 

 கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மேலும் கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கு காரணமாக மாவட்டங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைக் குறித்தும், மாவட்ட நிலைமைக் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன்  வீடியோகால் மூலம் ஆலோசனை  மேற்கொண்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்