சென்னையில் இருந்து டெல்லிக்கு நாளை முதல் சிறப்பு சரக்கு ரயில்.!
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், நாடு முழுவதும், விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, பேருந்து ஆகிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்வதற்கான சிறப்பு ரயில் இயங்கும் என தென்னக ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு முன்பதிவு செய்து விதிகளின் படி கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை முதல் சிறப்பு சரக்கு ரயில் சென்னையில் இருந்து புறப்பட தயாராக உள்ளது. முதலில் சென்னையில் இருந்து டெல்லிக்கு சரக்கு விரைவு ரயில் நாளை மாலை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு வரும் 3-ம் தேதி காலை 9 மணிக்கு டெல்லி சென்றடையும் எனவும், மற்றொரு ரயில் 8-ம் தேதி புறப்பட்டு வரும் ஏப்ரல்.10-ம் தேதி காலை 9.30 மணிக்கு டெல்லி சென்றடையும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.