கொரோனாவால் சந்தேகத்தில் உள்ள T20 கிரிக்கெட் உலகக்கோப்பை!
பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்பொழுது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவை திட்டமிட்ட நேரத்தில் நடக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வர ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த டி20 நடைபெறுவதில் சிக்கல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் மற்றொரு உலக கோப்பை இருப்பதால் இந்த ஆண்டு தள்ளிவைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் 2000 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 16 பேர் இறந்துள்ளனர். எனவே ஊரடங்கு, சீல் வைத்தல் மற்றும் பயணத்தடை என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.