தனது கடமையை செய்ய 450 கிமீ நடந்தே சென்ற காவலர்.!

Default Image

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. இதனால், விமானம், ரயில், பேருந்து என பொது போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கட்டாய தேவை (அனுமதி பெற்று செல்லலாம்) தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியில் வர அனுமதி இல்லை. 

இந்நிலையில் , உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திக்விஜய் சர்மா எனும் 22 வயது இளம் காவலர். இம்மாதம் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விடுமுறையில் இருந்துள்ளார். அதற்கிடையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக பணிக்கு வர வேண்டாம் என மேலதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை பொருட்படுத்தாமல், தனது பணிக்கு செல்ல உத்திர பிரதேசத்தில் இருந்து தான் வேலை செய்யும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சுமார் 450 கிமீ நடந்தே சென்றுள்ளார். கடந்த 25ஆம் தேதி நடை பயணத்தினை ஆரம்பித்து 28ஆம் தேதி முடித்துள்ளார். வழிநெடுக சமுக சேவகர்கள் கொடுத்த உணவை உண்டு வந்து சேர்ந்துள்ளார். மக்கள் பணியில் ஈடுபட 450 கிமீ நடந்தே வந்த இந்த இளம் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. நெடுந்தூரம் நடந்து வந்ததால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்