கொரோனா எதிரொலி ! ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு
ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுகிறது. ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாயவிலை கடைகளில் அமல்படுத்தப்படும்.மேலும் இத்திட்டம் தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த திட்டம் மூலம் கூடுதல் பயனாளிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது .இதற்கு இடையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில்,’ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டம் அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது.இந்த திட்டம், கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.