வீட்டில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவின் சூப்பர் ஐடியா.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான நடவடிக்கை என்றாலும், பலருக்கு பொழுதுபோகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். குழந்தைகளும் இதே நிலைமையில் தான் இருக்கின்றன.
அவர்களை குஷிப்படுத்த வண்டலூர் பூங்காவில் 2018ஆம் ஆண்டே புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வண்டலூர் வராமலே வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளலாம். காட்டு விலங்குகள் ஷவரில் குளிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது என அனைத்தும் இணையத்தில் நேரலைவாக பார்க்கமுடியும்.
தற்போது ஊரடங்கு என்பதால், இணையத்தின் வழியே நேரலையாக விலங்குகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். வண்டலூர் பூங்காவில் உள்ள உயிரினங்களை நேரலையாக காண https://www.aazp.in/live-streaming/ என்கிற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.