சமூக விலகலை கடைபிடிக்க மதுரையில் புதிய முயற்சி…! வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
மேலும் பொதுஇடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமுக விலகலை கடைபிடிக்கும் விதமாக இன்று முதல் பொதுமக்கள் காய்கறி வாங்க கூடுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.அதாவது,குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வியாபாரிகள் வாகனங்களில் காய்கறிகளைக் கொண்டு சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.