சென்னை மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசன் தற்கொலைக்கு முயற்சி?
தி.நகர் காவல் ஆணையர் சென்னை மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார்.
கல்லூரி வாசலில் வைத்து சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி மாணவி அஸ்வினி என்ற அதே கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை அழகேசன் கழுத்தையறுத்து கொலை செய்தார். தற்போது அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஒருதலை காதலால் ஏற்றுக்கொள்ளாததால் அஸ்வினி கொல்லப்பட்டு இருக்கிறார். தமிழகம் முழுக்க இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அஸ்வினியை அழகேசன் குத்தியவுடன் அங்கு இருந்த பொது மக்கள் அவனை பிடித்தனர். அவனை தாக்கி, போலீசில் பிடித்துக் கொடுத்தார்கள்.
இந்த நிலையில் மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசன் தற்கொலைக்கு முயன்றார் என்று தி.நகர் காவல் ஆணையர் தகவல் தெரிவித்து இருக்கிறார். அஸ்வினியை கத்தியால் குத்திய பின்னர் அழகேசன் உடனே தானும் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் என்று காவல் ஆணையர் அரவிந்தன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.