இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
கொலை முயற்சி, பலாத்காரம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமது ஷமியும், குடும்பத்தினரும் தம்மை கொடுமைப்படுத்துவதுடன், கொலை செய்யவும் முயற்சிப்பதாக அவரது மனைவி ஹஸின் ஜஹான் கொல்கத்தா ஜாதவ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், முகமது ஷமி மீது கொலை முயற்சி , குடும்ப வன்முறை , குற்றச்சதி , காயப்படுத்துதல், பலாத்காரம் , உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவில் முகமது ஷமியின் மூத்த சகோதரரர் ஹசிப் அகமது உட்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க தாம் தாயாராக இருப்பதாகவும், ஆனால் தமது மனைவி ஹஸின் ஜஹானை யாரோ தவறாக வழிநடத்தி வருவதாகவும் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.