குடும்ப அட்டைகளுக்கும் நாளை முதல் ரூ.2000 வழங்கப்படும்-நாராயணசாமி அறிவிப்பு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் 1071 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மக்களிடம் காணொளி மூலம் உரையேற்றும்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என கூறினார்.
இதையெடுத்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 4 மாதத்திற்கான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.
சட்டப்பேரவை வந்த அனைத்து எம்எல்ஏக்கள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கொரோனா நிவாரண நிதி நாளைமுதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் கணக்கிலும் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என இன்று சட்டப்பேரவையில் நாராயணசாமி கூறினார்.