மின்னல் வேகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா-இன்று இடைக்கால பட்ஜெட்..
புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடும் விளைவுகளை நாடுகள் சந்தித்து வருகிறது.உயிர்பலி மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே பொருளாதாரம் இருந்த நிலையில் தற்போது மிகுந்த சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இவ்வாறு தொற்று ஒருபுறம் பொருளாதார சரிவு மறுபுறம்..முடக்கப்பட்டு இருக்கும் மக்கள்..என இந்தியாவே பதற்றமான ஒரு சூழ்நிலையில் உள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசியல் வட்டார தகவல் படி அரசின் புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது.மேலும் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.அவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.