7,00,000 லட்சத்தை தாண்டியது..மின்னல் வேக பரவல்-எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
உலகம் முழுவதும் கண்டு அஞ்சி நடுங்கும் வண்ணம் விஷ்வரூபம் எடுக்க தொடங்கி விட்டது கொரோனா வைரஸ் இதன் பரவல் இல்லை மின்னல் வேக பரவல் ஆனது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது.கடுமையான நடவடிக்கை எல்லாம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.உலகே ஒரு காலத்தில் எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது.பதறிப்போன அமெரிக்கா செய்வது அறியாது திகைத்து நிற்கிறது இதன் மின்னல் வேக பரவலை கண்டு அப்படி இருக்க தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு ஆனது 7 லட்சத்தை தாண்டி விட்டது.
இது அதிவேக பரவல் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி இவ்வைரஸின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,439 பேரும்,பெரும் துயரை சந்தித்து வரும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் 80,110 பேர், ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,095 பேர்,அதே போல் பிரான்ஸ் ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,174 பேர், ஈரானில் 38,309 பேர் ,பிரிட்டனில் 19, 922 பேர் , சிங்கப்பூரில் 844 பேர், பாகிஸ்தானில் 1,597 பேர், இலங்கையில் 117 பேர்,இந்தியாவில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.