சிறப்பு பார்சல் வேகன்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை. 

இந்நிலையில், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், முகக்கவசங்கள், நிலக்கரி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல சிறப்பு வேகன்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. 

அதன்படி இந்த சிறப்பு ரயில்கள் கோவை-படேல் நகர் (டெல்லி பிராந்தியம்) – கோவை, கோவை-ராஜ்கோட்-கோவை, கோவை-ஜெய்பூர்-கோவை, சேலம்-பட்டிண்டா  ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 

தேவை உள்ளவர்கள் தென்னக ரயில்வே அலுவலகங்களை அணுகலாம் எனவும், விதிகளின் படி, இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.