கிருமினாசினிகளை அதிகளவில் தயாரித்துத்தர வேண்டும்.. ஆயுஷ் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்த மோடி!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் அடைந்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஆயுஷ் மருத்துவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆயுஷ் துறையின் கீழ் செயல்படும் மருத்துவர்கள் கிருமிநாசினி, சோப் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் தயாரித்து தர முன்வர வேண்டுமென ஆயுஷ் மருத்துவர்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.