கொரோனா தடுப்பு பணிகளுக்காக தயாநிதி மாறன் ரூ.1 கோடி நிதியுதவி.!
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, கொரோனா தடுப்பு & பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திரு. @Dayanidhi_Maran எம்.பி., அவர்கள் ரூ.1 கோடி ஒதுக்கீடு’#DMKagainstCorona pic.twitter.com/tl8xowuvir
— DMK (@arivalayam) March 29, 2020
அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாநிதி மாறன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இதனிடையே கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.