திமுக சார்பாக ஒரு எம்.பி மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு.!
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுப்பதை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார்.
இந்நிலையில் திமுக சார்பாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்தவர்களிடம் நிவாரண நிதியுதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து, வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூபாய் 1 கோடியும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் 25 லட்சம் ரூபாயையும், பென்னகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இன்பசேகரன் 25 லட்சம் ரூபாயையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளனர்.