கொரோனா நிதியுதவி… பள்ளி மாணவன் வழங்கிய ரூ.1000…. அற்புதமான செயல் என பிரதமர் புகழாரம்…

கோரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துள்ளது. எனவே அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு , இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை. இதனால் இந்தியாவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு பொருளாதார சிக்கல்களில் இந்தியா தற்போது சிக்கியுள்ளது. எனவே இதற்க்காக பிரதமர் மோடிநாட்டு மக்களிடம் நிதியுதவி அளிக்குமாறு தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார். இந்நிலையில், சாஹில் குலியா என்ற பள்ளி மாணவர் ஒருவர் 1000 ரூபாய் அனுப்பிவிட்டு, அதில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு அந்த மாணவன் “ஒரு மாணவனாக இந்த தேசத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி, இந்த தேசத்தின் எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க இந்த உதவி உறுதி செய்கிறது. இது அற்புதமான செயல் சாஹில். உன்னை நினைத்துப் மிகவும் பெருமை கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025