குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அமைச்சர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இருவரின் பதவி விலகலையும் ஏற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்கிற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்துத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர் பதவி விலகல் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தனர்.
இருவரின் பதவி விலகலையும் ஏற்றுக்கொண்டதாகக் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். அசோக் கஜபதி ராஜுவிடம் இருந்த விமானப் போக்குவரத்துத் துறையைப் பிரதமர் மோடியே கவனித்துக்கொள்வார் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.