விஜய் டிவியால் கலங்கிய சிம்பு!அப்படி என்னதான் நடந்தது?
கெட்டவன், மோசமானவன், அடங்காதவன் என்றாலே சிம்பு தான்.சிம்புவைப் பற்றிப் பேசினாலே பொதுவான ரசிகர்கள் கூட கடுப்பாவதும் வாடிக்கை.இதற்கெல்லாம் சிம்புதான் காரணம் என்பதும் உண்மைதான்.
இந்நிலையில் சிம்புவே நெகிழ்ந்து போய் அழும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிம்புவிற்கு ரசிகர்கள் பலத்த கைத்தட்டல்களையும் எஸ்டிஆர் வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினர். இதைப் பார்த்த சிம்பு நெகிழ்ச்சியில் அழுதேவிட்டார். “எப்போதுமே என்னைப் பத்தி நிறைய தப்பாவே கேட்டுட்டேன். திடீர்னு நல்லா சொல்றதை தாங்கிக்க முடியல” என்று அழுதபடியே தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.