தமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!
தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லிருந்து 41 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.சி வளாகத்தில் பேட்டியளித்த அவர், விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண் கொரோனா தொற்று உருது செய்யப்பட்டு, மதுரை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர் ஒருவர் இருப்பார் என்றும் கொரோனா சிகிக்சைக்காக 17,000 படுக்கைகள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் கொரோனா சிகிக்சைக்காக மருத்துவ கட்டமைப்பு அதிகரித்து வருகிறது எனவும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 41 பேருக்கு தொடர்புள்ள 10 மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும். இவர்களில் காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
#UPDATE: 60Yr M from Rajapalayam, Virudhnagar tested positive, admitted in madurai medical college. Pt is in isolation & is stable @MoHFW_INDIA @CMOTamilNadu @Vijayabaskarofl
— National Health Mission – Tamil Nadu (@NHM_TN) March 28, 2020