கொரோனாவால் பாதித்தவர்களை நெருங்கினால் எச்சரிக்கும் ஆப் அறிமுகம் .!

Default Image

கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய ,மாநில  அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது என்றும் இதில் 862 பேர் இந்தியர்களும், 47 பேர் வெளிநாட்டினர். கொரோனாவால் 19 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால் எச்சரிக்கும் அப்ளிகேஷனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அப்ளிகேஷன் பெயர் “கொரோனா கவச் ஆப் “ இந்த ஆப் தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.முதலில் ஸ்மார்ட்போனில்  கொரோனா கவச் ஆப் டவுன்லோட் செய்த பிறகு உங்கள் தொலைபேசி எண் மூலம் கொரோனா கவச் ஆப்பிற்குள் நுழைய முடியும்.  பின்னர் நீங்கள் கொடுத்த நம்பருக்கு ஒடிபி  வரும் அந்த ஒடிபி  நம்பர் கொடுத்தவுடன்.

தற்போது எவ்வளவு பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  எவ்வளவு பேர்  இறந்துள்ளனர். என்பது குறித்த விபரங்கள் தெரியும்.

सरकार का Corona Kavach बताएगा आस पास ...

அதன் பின்னர் உங்கள்  உடல்நிலை, குறித்து கேள்விகள் கேட்கப்படும் அனைத்திற்கும் பதிலளித்த பிறகு நீங்கள் அளித்த பதில் அடிப்படையில் இந்த ஆப் உங்களை வெவ்வேறு வகைகளாக வரிசைப்படுத்தும்.

  • பச்சை குறியீடு காட்டினால் நீங்கள் நலமாக உள்ளீர் .
  • ஆரஞ்சு குறியீடு எனில்  நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்தும்.
  • அதுவே மஞ்சள் குறியீடு எனில் நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தும் .
  • கடைசியாக உள்ள சிவப்பு குறியீடு காட்டினால் நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என கொரோனா கவச் ஆப் உங்களை எச்சரிக்கும். 

கொரோனா கவச் ஆப் கீழே நடுவில் ஒரு பட்டன் உள்ளது. அதனை அழுத்தினால் நமது அருகில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் எச்சரிக்கும்.

மேலும் ஆப்பை பாதிக்கப்பட்டவர்கள் வைத்திருந்தாலோ அல்லது பதிவு செய்திருந்தாலோ மட்டுமே  நமக்கு எச்சரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்