மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி…கொரோனோ பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்த இளைஞர்… மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்… அமைச்சர்
உலகம் முழுவதும் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று மட்டும் 8 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கொரோனோ பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தமிழகத்திலேயே முதல் நபராக பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடந்த 17-ம் தேதி வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், தமிழகத்தில் கொரோன தொற்று பாதித்த மூன்றாவது நபராக அவர் அறியப்பட்டார். அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தனி கொரோன வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களிலேயே அவரது உடலில் வைரஸ் தாக்கம் குறைந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இரண்டு பரிசோதனைகளிலும் வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததாகவும், வீட்டில் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து அவர், கண்காணிக்கப்படுவார் என்றும், தமிழகத்தில் தற்போது வரை கொரோனோ பாதிப்பிலிருந்து 2 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.